‘ஜில்லா’ மோகன்லாலின் சம்பளம்?

‘ஜில்லா’ மோகன்லாலின் சம்பளம்?

செய்திகள் 4-Dec-2013 4:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் - மோகன்லால் இணைந்திருக்கும் ‘ஜில்லா’ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்தமைக்காக மோகன்லால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்! மாறாக, ‘ஜில்லா’வின் கேரள விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார் கேரள சூப்பர் ஸ்டாரான மோகன்லால்! பொங்கலையொட்டி ரிலீசாகவிருக்கும் ’ஜில்லா’ படத்திற்கு தமிழகத்தில் எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறதோ அதைவிட இரு மடங்கு எதிர்பார்ப்பு கேரள ரசிகர்களிடையேயும் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மோகன்லால் - விஜய் இணைந்திருப்பதுதான்! விஜய்க்கு ஏற்கெனவே கேரளாவில் பெரிய மார்க்கெட் இருக்கும் நிலையில் அவருடன் மோகன்லாலும் இணைந்திருப்பதால் ‘ஜில்லா’ படம் மூன்றரை கோடி முதல் 4 கோடி வரை விலை போகும் என்கிறார்கள்! அதாவது ‘ஜில்லா’வுக்கான மோகன்லாலின் சம்பளம் கிட்டத்தட்ட 4 கோடி என்று வைத்துக் கொள்ளலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;