நாளை இங்க என்ன சொல்லுது!

நாளை இங்க என்ன சொல்லுது!

செய்திகள் 4-Dec-2013 2:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில், ‘விடிவி’ கணேஷ் தயாரித்து வரும் படம் ‘இங்க என்ன சொல்லுது’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ‘விடிவி’ கணேஷே நடிக்க, அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், பாண்டியராஜன், மயில்சாமி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஸ்வர்ணமால்யா ஆகியோரும் நடிக்கும் இப்படத்தில் எடிட்டர் ஆண்டனியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்காக ‘விடிவி’ கணேஷ் இரண்டு பாடல்களை எழுதியிருப்பதோடு ஒரு பாடலை பாடவும் செய்திருக்கிறார். தரண் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெறுகிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவிருக்கிறது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியாது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;