கமல் துவக்கி வைக்கும் திரைப்பட விழா!

கமல் துவக்கி வைக்கும் திரைப்பட விழா!

செய்திகள் 4-Dec-2013 12:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெங்களூருவில் வருகிற 26 ஆம் தேதி முதல் 8 நாட்கள் ‘6-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் இந்த விழாவை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்காக கர்நாடக அரசு சார்பில் 2 கோடி ரூபாயை முதல் அமைச்சர் சித்தராமையா வழங்க இருக்கிறார். பெங்களூருவில் தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 145 திரைப்படங்கள் வெவ்வேறு திரையரங்குகளிலாக திரையிடப்படவிருக்கிறது. இந்த விழாவில கன்னட சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கிய டாக்டர் ராஜ்குமார் நடித்த படங்களை திரையிட்டு அவருக்கு மரியாதை செய்யவும் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெங்களூர் நாட்கள் - பரபரப்பா ஒரு ஊரு பாடல் வீடியோ


;