ஹாரிஸின் புதிய கிஃப்ட்!

ஹாரிஸின் புதிய கிஃப்ட்!

செய்திகள் 4-Dec-2013 12:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விரைவில திரைக்கு வரவிருக்கும் படம் ‘என்றென்றும் புன்னகை’. அஹமத் இயக்கத்தில் ஜீவா, த்ரிஷா, வினய், ஆன்ட்ரியா முதலானோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலகள் முடிந்து, ஆடியோவும் வெளியான நிலையில் இந்தப் படத்தை பார்த்த ஹாரிஸ் ஜெயராஜுக்கு படம் ரொம்பவும் பிடித்து போனதாம். ஏற்கெனவே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் இன்னொரு பாடல் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஹாரிஸ் ஜெயராஜுக்கு தோன்ற, படத்திற்காக மீண்டும் ஒரு பாடலை உருவாக்கி அதற்கு இசையும் அமைத்து விட்டார். ‘இந்தப் பாடலையும் நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்பறேன்’’ என்று ஹாரிஸ் ட்வீட்டும் செய்திருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;