டுபிட்டர்ல வடிவேலு!

டுபிட்டர்ல வடிவேலு!

செய்திகள் 4-Dec-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்றைய நவீன யுகத்தில் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்கள் மக்களது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது! இப்போது சினிமாவில் இருக்கும் பெரும்பாலான கலைஞர்களும் இதுபோன்ற இணையதளங்களை பயன்படுத்தி தங்கள் சம்பந்தமான விவரங்களை உடனுக்குடன் பறிமாறிக் கொண்டு வருவதோடு, ரசிகர்களுடனான தொடர்புக்கும் இதை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே ஏராளமான சினிமா கலைஞர்கள் இது போன்ற இணைய தளங்களில் இணைந்துள்ள நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா, நடிகர்கள் விவேக், வடிவேலு ஆகியோரும் ‘டுவிட்டர்’ இணைய தளத்தில் இணைந்துள்ளனர்.

‘டுவிட்டர்’ இணையத்தில் இணைந்துள்ள வடிவேலு அது குறித்து தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையாக கூறும்போது, ‘‘ஹலோ டுபிட்டர் ஃபேன்ஸ், எல்லாருக்கும் வணக்கம்! என் ஃப்ரெண்டுங்க எல்லாரும் சேர்ந்து அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க, அக்கவுண்ட் ஓபன் பண்ணுஙகன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க! நான், ‘ஏற்கெனவே பாங்கல அக்கவுண்ட் ஓபன்ல தானே இருக்கு, மறுபடியும் எதற்கு?’ன்னு கேட்டேன்! இல்லைங்க, டுபிட்டர்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்கன்னாங்க. (‘அதுதானப்பா?’ன்னு வடிவேலு கூட இருந்தவங்கக்கிட்ட கேட்க, அவங்கல்லாம் சேர்ந்து ஆமாம், ஆமாம்னு தலையாட்ட…) பாங்க் அக்கவுண்ட் பணம் பரிமாறறதுக்கு, இது ரசிகர்களுடன் அன்பை பரிமாறறதுக்கான அக்கவுண்ட்! அதனால உடனே கடையை திறங்கன்னு கடையை திறந்திட்டேன்! இனி ரெகுலரா உங்களை சந்திப்பேன். இடையில் ஒரு சின்ன கேப் வந்துருச்சு. விரைவில உங்களை எல்லாம் ‘ஜெகஜால புஜபல தெனாலி ராமன்’ மூலமா சந்திக்க வர்றேன்’’ என்றார். ஆக, இனி வடிவேலுவை டுவிட்டர்லயும் நாம ஃபாலோ பண்ணலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;