விஷ்ணு இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா!

விஷ்ணு இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா!

செய்திகள் 4-Dec-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘ஆரம்பம்’ படம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் என எல்லோருக்கும் நல்ல லாபத்தை தந்து வெற்றிப் படமாக அமைந்து விட, அடுத்து படத்திற்கான வேலைகளில் படு உற்சாகமாக இயங்கி வருகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ என நான்கு படங்களில் ஆர்யாவுடன் இணைந்த விஷ்ணுவர்தன் தனது அடுத்த படத்தில் ஆர்யா – கிருஷ்ணா என இருவரை ஹீரோக்களாக நடிக்க வைத்து இயக்க இருக்கிறார். ஏற்கெனவே பல படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணா, எப்போது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் இப்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது. ஆர்யா, விஷ்ணு, கிருஷ்ணா இணையும் இப்படத்தை யார் தயாரிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - டீசர்


;