’வீரம்’ அஜித் சாதனை!

’வீரம்’ அஜித் சாதனை!

செய்திகள் 3-Dec-2013 5:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொங்கல் ரேசில் குதிக்கும் விதமாக அஜித்தின் ’வீரம்’ படம் விறுவிறுப்பாக ரெடியாகி வருகிறது. ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி படத்துக்கு படம் அஜித நடிக்கும் படம் மீதான எதிர்பார்ப்பு, வியாபாரம் கூடிக் கொண்டிருப்பதால், ‘வீரம்’ படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்! இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக பிரதிகள் போடப்பட்ட படம் என்ற பெருமையை ‘வீரம்’ பெறவிருக்கிறது! அதாவது ‘வீரம்’ படத்திற்கு 1800 பிரிண்டுகள் போடப்படவிருக்கிறதாம்! இந்த தகவலை ’வீர்ம்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;