சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த்!

சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த்!

செய்திகள் 3-Dec-2013 5:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். தரமான குறும்படங்களை திரைப்படங்களாக எடுத்து வெற்றிக் கண்ட இவர், அடுத்து வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களை ரீ-மேக் செய்து தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் ஒரு சில மாதங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசியா’ என்ற படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். இந்தப் படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் பிரசாத் ராமர் இயக்க இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவான இப்படத்தை கன்னடத்தில் பவன் குமார் இயக்கியிருந்தார். இந்தப் படம் கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்றதொடு, படத்திற்கு பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;