சிம்பு, தனுஷ், அனிருத் புதிய கூட்டணி!

சிம்பு, தனுஷ், அனிருத் புதிய கூட்டணி!

செய்திகள் 3-Dec-2013 4:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர்கள் தனுஷ், சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மூவரும் லண்டனுக்கு பயணம் ஆகியிருக்கிறார்கள்! ஆனால் எந்தப் படத்தின் வேலைகளுக்காக இவர்கள் லண்டன் சென்றிருக்கிறார்கள்? என்று யாரும் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டாம்! ஒரு ஜாலி டூராக தான் லண்டன் பயணமாகியிருக்கிறார்கள்!

சமீபத்தில் தான் சிம்புவும், தனுஷும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்! இப்போது இருவரும் குடுமப் நண்பர்களைபோல பழகி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் அனிருத் ஏற்கெனவே நண்பர். தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறதாம். அது மாதிரி பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஒரு சில நாட்கள் நடந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்க இன்னும் சில நாட்கள் இருக்கிறதாம். இதனால் கிடைத்த ஒரு கேப்-பில் ஒரு உல்லாச பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர் இந்த மூவர் அணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;