இதுவரை 'ஜில்லா'...

இதுவரை ‘ஜில்லா’...

கட்டுரை 3-Dec-2013 11:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இளைய தளபதி’ விஜய்க்கு, ‘துப்பாக்கி’ தந்த ‘புல்லட்’ வேகம், அவரது அடுத்த படமான ‘தலைவா’ கொஞ்சம் குறைத்துவிட, அதை சரி செய்யும் விதமாக இப்போது ‘ஜில்லா’வில் கடுமையாக உழைத்து வருகிறார்!

‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில், நேசன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ், மகத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது!

சென்னை, மதுரை, ஹைதராபாத், ஜப்பான் என பல இடங்களில் நடந்துள்ள படப்பிடிப்பை தொடர்ந்து, இறுதிகட்டத்தை எட்டியுள்ள ‘ஜில்லா’வின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.

‘துப்பாக்கி, தலைவா’வைத் தொடர்ந்து இப்படத்திலும் விஜய் சூப்பர் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். காஜல் அகர்வாலைப் பார்த்து வர்ணித்து பாடும் இந்தப் பாடலை டி.இமான் இசையில், கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்கள் விஜய்யும் ஸ்ரேயா கோஷலும். பல வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு வைரமுத்து எழுதும் பாடல் இது என்பது ‘ஜில்லா’வை பொறுத்தவரை ஸ்பெஷலான விஷயம்! ‘கண்டாங்கி கண்டாங்கி... கட்டி வந்த பொண்ணு... கண்டாலே கிறுக்கேத்தும்... கஞ்சா வச்ச கண்ணு...’ என்று வருகிறது அந்த டூயட் பாடல். இப்போது விஜய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இது தானாம்!

ஐந்து பாடல்கள், இரண்டு கரோக்கி வெர்ஷன், ஒரு தீம் மியூசிக் என ‘ஜில்லா’ மியூசிக் ஆல்பம் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இருக்குமாம். விஜய் பாடிய பாடல் தவிர, கவிஞர் விவேகாவின் பாடல் வரிகளில் ரஞ்சித் & சுனிதி சௌகான் இணைந்து பாடியிருக்கும் ஒரு ‘பெப்பி சாங்’ ஒன்றும் இருப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்திருக்கிறார்.

விஜய்க்கு இப்படத்தில் அறிமுக சண்டைக் காட்சி ஒன்று உள்ளதாம். இதனை செங்கல்பட்டுக்கு அருகே பரபரப்பான பின்னணியில் எடுத்து முடித்திருக்கிறார்களாம்.

விஜய்க்கு இப்படத்தில் சிறு வயது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கின்றன.

படத்தின் முதல்பாதிக்கு இப்போதே டப்பிங் வேலைகளையும் முடித்துவிட்டார்களாம். முதல் பாதி முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம் இயக்குனர் நேசன்.

சமீபத்தில் பொள்ளாச்சில் விஜய் - காஜல் அகர்வால் நடனமாட பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். இதற்கு நடனம் அமைத்திருப்பவர் ராஜுசுந்தரம்.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது ‘டப்பிங்’ வேலைகள் பிஸியாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

படமே இன்னும் முழுதாக முடியாத நிலையில், ‘ஜில்லா’வின் வினியோக உரிமை அறிவித்த இரண்டு நாட்களிலேயே அனைத்து ஏரியாவும் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. சென்னை உரிமையை தமீன்ஸ் ஃபிலிம்ஸ், NSC உரிமையை யாஹயா பாய் நிறுவனம், கோயம்புத்தூர் உரிமையை காஸ்மோ சிவா, திருச்சி உரிமையை பாஸ் ஃபிலிம்ஸ் ஆகியோர் வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, கேரள உரிமையை சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கியிருக்கிறார்.

ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கும் ‘ஜில்லா’வின் டீஸர் மற்றும் ஆடியோவை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கூடுதல் சந்தோஷமாக ‘ஜில்லா’வோடு, அஜித்தின் ‘வீரம்’ திரைப்படமும் பொங்கலுக்கு மோதவிருப்பதால் ‘தல&தளபதி’ ரசிகர்களுக்கு வரும் பொங்கலுக்கு ‘டபுள் தமாக்கா’தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;