மலையாள மண்ணில் சிபி!

மலையாள மண்ணில் சிபி!

செய்திகள் 3-Dec-2013 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சிபிராஜ் நடித்து வரும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. இந்தப் படத்தை ‘நாதம்பாள்ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் சத்யராஜ் தயாரிக்கிறார். சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இராணுவ புலனாய்வு நாய் ஒன்றை முக்கிய பாத்திரமாக நடிக்க வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையைல் இன்று முதல் கேரளா – பாலக்காட்டில் கடைசிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. மாறுபட்ட கதை அமைப்பில் உருவாகி வரும் படமாம் இது. இதில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’, ‘சுண்டாட்டம்’ போன்ற பல படங்களில் நடித்த அருந்ததி நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்டாவ காணோம் - டீசர்


;