கஞ்சாகருப்பு தயாரிப்பில் சமுத்திரக்கனி

கஞ்சாகருப்பு தயாரிப்பில் சமுத்திரக்கனி

செய்திகள் 3-Dec-2013 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தருண்காந்த் பிலிம் ஃபேக்டரி சார்பில் கஞ்சாகருப்பு முதன் முறையாக தயாரித்து நடித்திருக்கும் படம் 'வேல்முருகன் போர்வெல்ஸ்'. இப்படத்தை மலையன் படத்தை இயக்கிய எம்.பி.கோபி இயக்கியுள்ளார். இசையமைத்திருப்பவர் ஶ்ரீகாந்த்தேவா. மகேஷ், ஆருஷி நடித்திருக்கும் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடை பெற்றது. அமீர், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் படத்தின் இசையை வெளியிட்டனர்.

இசையை வெளியிட்டு பேசியபோது: A.R.முருகதாஸ்: வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தோட இயக்குனர், என் நண்பர் கோபி ஜெயிச்சே ஆகணும். தீனா படத்தோட முதல் ஷோ அப்போ நான் எவ்வளவு சந்தொஷபட்டோனோ, அதே அளவு கோபி ஜெயிக்கும்போது சந்தோஷப்படுவேன். நான் உதவி இயக்குனராக ஒரு இயக்குனர்கிட்ட வேலை செஞ்சப்போ, சிக்கலான சூழல்ல கோபி எனக்கு செஞ்ச உதவி, வேற எந்த ஒரு உதவி இயக்குனரும், அண்ணன் தம்பி கூட செய்ய மாட்டாங்க. ஆனா அவர் எனக்கு செய்தார். தூய சிரிப்போட இருக்கும் கோபி, என்னை பார்க்கறப்போ எல்லாம் நான் ஜெயிச்சிருவேன் சார்னு சொல்வார். கடவுள் ஆசிர்வாதத்துல நிச்சயம் ஜெயிப்பார். அமீர் சார் அல்லாவை வேண்டுனா நான் முருகனை வேண்டுவேன். நிச்சயம் படம் ஜெயிக்கும்.

அமீர் பேசும்போது: கஞ்சா கருப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. முதல் நாள் என் ஆபிசில் எப்படி பார்த்தேனோ அப்படித்தான் இன்று வரை உள்ளார். இடையில் சில மாற்றம். அப்போ நான் சொன்னேன், இந்த வாய்ப்பு உனக்கு சாதரணமாக கிடைத்த வாய்ப்பு இல்ல, உன் தலைமுறைக்கே கிடைத்த வாய்ப்பு. அதை தொலைச்சிடாதே. பத்திரமா வச்சிக்கோ என்றேன். அதன்படிதான் இன்று ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார். இயக்குனருக்காகவே படத்தை தயாரித்திருகிறார் கருப்பு. அதற்காகவே படம் வெற்றி பெறணும், படம் வெளியீட்டில் ஏதாவது பிரச்சினை, தேவை என்றால் என் அலுவலக கதவை தட்டலாம்.

சமுத்திரக்கனி பேசும்போது: 'முதன்முறையாக கஞ்ச கருப்புவை சந்தித்தது மறக்கவே முடியாது, அமீர் ஆபிசில் மொட்டை மாடில இருட்டுல உட்கார்ந்திருந்தார். எழுந்து ஆபிஸ் ஹால்ல வந்து உட்கார சொன்னேன். வேணாம் இதுதான் எனக்கு சரி என்றார். அதுக்கப்புறம் ராம், பருத்திவீரன் முடிஞ்சி நல்ல நட்பு தொடர்ந்துச்சு. ஒருநாள் திடீர்னு படம் தயாரிக்கபோறதா சொன்னார், இயக்குனர் கோபி. பழகுனா தான் நண்பன், ஆனா கோபி பழகுறதுக்கு முன்னாடியே எல்லாருக்கும் நண்பன் ஆயிடுவான். எனக்கு அன்னமிட்ட கை அது. இதே பேனர்ல கோபி இயக்கபோற அடுத்த படத்துல நான் நடிக்க போறேன்'.என்றார்.

கரு.பழனியப்பன் பேசும் போது: 'கஞ்சா கருப்பு நடிக்க கூப்பிட்டால் வருவார், ஹீரோவாவும் வருவார், கோபி படம் தயாரிக்க கூப்பிட்டாலும் வருவார். இழப்பதற்கு ஒண்ணும் இல்லை, பயணம் தான் முக்கியம்-னு போய்க்கிட்டே இருக்கான் கருப்பு. எளிய குடும்பத்துல பிறந்த கருப்பு, படம் தயாரிக்கறது பெரிய விஷயம் இல்ல, படம் தயாரிச்ச பின்னும் எளிமையா இருக்காரே அதுதான் பெரிய விஷயம். இவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்'. என்றார்.

விழாவின் முடிவில் இயக்குனர் எம்.பி.கோபி நன்றி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;