ஆர்யாவுடன் ஸ்ருதி?

ஆர்யாவுடன் ஸ்ருதி?

செய்திகள் 3-Dec-2013 10:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தந்த ‘நேமிசந்த் ஜெபக்’ பட நிறுவனம் சார்பில் ஹிதேஷ் ஜெபக் தயாரிக்கும் படம் ’மீகாமன்’. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தை 'தடையற தாக்க' வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்குகிறார். ‘பூலோகம்’ படத்தின் கேமிராமேன் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமப்பவர் தமன்.

ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. முன்னணி நடிகைகள் பலர் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் ஸ்ருதிஹாசனும் ஒருவர்! கதைக்களம் கோவா மற்றும் குஜராத் என்பதால் வட இந்திய நடிகர்களையும் நடிக்க வைக்க உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 5 -ஆம் முதல் ஆரம்பமாகிறது. தொடர்ந்து தனது படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டி வரும் மகிழ் திருமேனி இந்த தலைப்பு குறித்து விளக்கம் அளிக்கும்போது, ‘‘மீகாமன்’ என்றால்’ Captain of the Ship என்று அர்த்தம். இதற்கு தமிழில் விளக்கம் கூறுவது துரதிர்ஷ்டவசமானது’ என்றார்’’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;