வித்யா பாலனுக்கு பிச்சை போட்ட ரசிகர்கள்!

வித்யா பாலனுக்கு  பிச்சை போட்ட ரசிகர்கள்!

செய்திகள் 3-Dec-2013 10:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் வித்யா பாலன் அடுத்து ‘பாபி ஜாசூஸ்’ என்ற படத்தில் புலனாய்வு துறை போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்க இருக்கிறார். சமீர் ஷெய்க் இயக்கும் இப்படத்திறகாக சமீபத்தில் ஹைதராபாத் இரயில்வே நிலையத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது யாசகர் போன்று மாறுவேடம் போட்ட வித்யா பாலன் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோரிடம் பிச்சை கேட்பது மாதிரியான காட்சி படம் பிடிக்க, அவரை நிஜ யாசகர் என்று நினைத்து நிறைய பேர் அவருக்கு பணம் போட்டு சென்றனராம்.

அத்துடன் அவருக்கு பணம் கொடுத்த ஒரு பெண்மணி, ஏதாவது வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டியது தானே, இப்படி உட்கார்ந்து பிச்சை கேட்கிறீயே…” என்று திட்டியும் சென்றுள்ளார். இதையெல்லாம் அங்கு வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்! ‘‘வித்யா பாலனின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு உருவாகி வரும் இப்படம் ‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்’’ என்கிறார் படத்தின் இயக்குனர் சமீர் ஷெய்க்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீ எங்கே என் அன்பே - இதோ இதோ


;