‘தமிழ்மொழி காக்கும் மலேசியா’ - தாஜ்நுர்

‘தமிழ்மொழி காக்கும் மலேசியா’  - தாஜ்நுர்

செய்திகள் 2-Dec-2013 3:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வம்சம்’ படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருபவர் தாஜ்நுர். இவர் ‘தமிழ்மொழி காக்கும் மலேசியா’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியிருந்தார். இதன் வெளியீட்டு விழா, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. ஆல்பத்தை கிம்மா-வின் தலைவர் இப்ராஹிம் மற்றும் கீதாஞ்சலிஜி -ன் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு தாஜ்நுரை பாராட்டி பேசினார். ‘என் இனிய மலேசிய தமிழ்மக்களே என்றவுடன் கைதட்டி ஆரவார ஒலி எழுப்பினர். கைதட்டல் சத்தம் அடங்க வெகு நேரம் ஆனது. ‘இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களையும் கேட்டேன். ஒரு சினிமா பாடலுக்கு தேவையான அத்தனை நுணுக்கங்களுடனும் இந்த பாடல்களை பிரமாண்டமாக உருவாக்கியிருந்தார் தாஜ்நுர்.

அதுமட்டுமல்ல, அந்த பாடல்களை இங்குள்ள பாடகர்களை கொண்டே பாடவும் வைத்திருக்கிறார். அதற்கு இசைக்கருவிகளை வாசித்தவர்களும் இங்கிருக்கும் கலைஞர்கள்தான் என்பதை கேள்விப்படும் போது தாஜ்நுர் இந்த நாட்டு கலைஞர்களுக்கும் எவ்வளவு மதிப்பு கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். அவருக்கு தமிழ்சினிமாவில் மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது’ என்றார். பாடலாசிரியர்கள் சினேகன், பா.விஜய் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதன் பிறகு இசையமைப்பாளர் தாஜ்நுரின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.முதலில் ஃபார்ஸ்ட் பீட் என்று சொல்லப்படும் வேகமான பாடல்களும், அதற்கப்புறம் மெலடி பாடல்களும், பிறகு இளையராஜாவின் மெலடி பாடல்களும் தனித்தனியாக இசைக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடலான ஜெய்ஹோ பாடலை அவரது சகோதரி ஏ.ஆர்.ரஹைனா பாடினார். பாடகர்கள் வேல்முருகன், யாசின், சம்சுதீன், தீபக், நான்ஸி, திருமுகி, சத்யன் ஆகியோரும் கலந்து கொண்டு பாடினார்கள்.

நிகழ்ச்சியை ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து அஷ்ரப், மற்றும் ரஷிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை டீசர்


;