‘பிரியாணி’ ரிலீஸ் டேட்!

‘பிரியாணி’ ரிலீஸ் டேட்!

செய்திகள் 2-Dec-2013 1:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘பிரியாணி’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வனி நடித்திருக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம், வெங்கட் பிரபுவுடன் கார்த்தி முதன் முதலாக இணைந்திருக்கும் படம், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் 100-வது படம் என பல ‘ஸ்பெஷல்’களுடன், பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் ‘பிரியாணி’ வருகிற 20ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது. இதே தினம் ‘பிரியாணி’யின் தெலுங்கு பதிப்பும் ரிலீசாகவிருக்கிறது. கார்த்திக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பதால் ஆந்திர திரையுலக ரசிகர்களும் ‘பிரியாணி’யின் வெளியீட்டை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;