சமந்தா பிரச்சனை! லிங்குசாமி விளக்கம்!

சமந்தா பிரச்சனை! லிங்குசாமி விளக்கம்!

செய்திகள் 2-Dec-2013 12:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா நடிப்பில், லிங்குசாமி இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கியது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அங்கு ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், சமந்தா தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அதனால் அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாததால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகின! சமந்தா தோல் வியாதிக்கு சிகிச்சை பெற்று படப்பிடிப்புக்கு திரும்ப நிறைய நாட்கள் ஆகும் என்றும், இதனால் சமந்தாவை படத்திலிருந்து லிங்குசாமி நீக்கிவிட்டு வேறொரு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்க, இந்தச் செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக லிங்குசாமி, ‘‘என்னுடைய படத்தில் சூர்யாவின் ஜோடி சமந்தா தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. வருகிற 7-ஆம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறும்’’ என்று ட்வீட் பண்ணியிருக்கிறார். இதனால் இதுவரை சமந்தா குறித்து வந்த செய்திகளுக்கு ஒரு முடிவு கிடைத்து விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;