கஞ்சன் ஆன கஞ்சா கருப்பு

கஞ்சன் ஆன கஞ்சா கருப்பு

செய்திகள் 2-Dec-2013 11:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தாமரை மூவீஸ்’ வழங்க ‘சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.துரைசாமி பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ‘காந்தர்வன்’.

இந்தப் படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார்.மற்றும் கஞ்சா கருப்பு, ‘காதல்’ தண்டபாணி, நெல்லை சிவா, ஆண்டமுத்து, வெள்ளை சுப்பையா, கிரேன் மனோகர், கோவை செந்தில்குமார், செல்லத்துரை,ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சலங்கை துரை . இவர் கரண், வடிவேலு நடித்த ‘காத்தவராயன்’ படத்தை இயக்கியவர்.படம் பற்றி இயக்குனர் கூறும் போது,

‘‘இந்தப் படத்திற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாயில் கதிர், ரிஷா பங்கேற்று நடித்த ‘காதல் ஒரு பட்டாம்பூச்சி’ என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படம் நல்ல பொழுது போக்குப்படமாக இருக்கும். கஞ்சா கருப்பு இந்தப் படத்தில் படு கஞ்சனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு கஞ்சா கருப்பு ‘கஞ்ச கருப்பு’ என்று பேர் வாங்குவார்’’ என்றார் இயக்குனர் சலங்கைதுரை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னோடு விளையாடு - டிரைலர்


;