விமான நிலையத்தில் தகராறு செய்த கலாபவன் மணி!

விமான நிலையத்தில் தகராறு செய்த கலாபவன் மணி!

செய்திகள் 2-Dec-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெமினி’, ‘காசி’ உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பவர் கலாபவன் மணி. இவர் சமீபத்தில் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு சென்றிருந்தார். கலை நிகழ்ச்சிகள் முடிந்து கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய கலாபவன் மணியை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் கையில் அணிந்திருந்த கனமான பிரேஸ்லெட் பற்றி கஸ்டம்ஸ் அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். அப்போது சுங்க இலாகா அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கலாபவன் மணி போதுமான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகளுக்கும், மணிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. அப்போது கோபமடைந்த கலாபவன் மணி தனது கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டை கழற்றி கஸ்டம்ஸ் அதிகாரிகள் முன்னாடி தூக்கி எறிந்து வெளியில் வந்திருக்கிறார். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பத்தை தொடர்ந்து கலாபவன் மணிக்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா சென்று வரும்போது கேரள வனத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்து, வழக்கில் சிக்கிக் கொண்டவர் கலாபவன் மணி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;