கார் விபத்தில் இறந்த பிரபல நடிகர்!

கார் விபத்தில் இறந்த பிரபல நடிகர்!

செய்திகள் 2-Dec-2013 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸ்’ படம் உட்பட பல ஹாலிவுட் படங்கலில் நடித்து புகழ் பெற்றவர் பால் வாக்கர். இப்போது ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸ்’ படத்தின் 7-ஆம் பாகம் எடுக்கப்படு வருகிறது. இந்தப் படத்தில் நடித்து கொண்டிருந்த இவர், சென்ற சனிக் கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டணை விழாவில் கல்ந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அவரது நண்பர்களுடன் காரில் திரும்பிகொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த மின் கம்பம்த்திலும், மரத்திலும் பயங்கரமாக மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் பால் வாக்கரும் அவரது நண்பர்களும் உடல் கருகி பலியானார்கள். இச்சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள்து. ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸ்’ சீரிஸ் படங்களில் கார் ரேஸ் வீரராக நடித்து தூள் கிளப்பி வந்த பால்வாக்கர், கார் விபத்தில் சிக்கிக்கொண்டு இறந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;