’நடனமேதை’ ரகுராம் மாஸ்டர் காலமானார்!

’நடனமேதை’ ரகுராம் மாஸ்டர் காலமானார்!

செய்திகள் 30-Nov-2013 2:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர்! தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலாக 1500 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணிபுரிந்தவர்! எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., முதலானோர் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே நடன இயக்குனர் ஆக இருந்து வரும் ரகுராம் மாஸ்டர் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட சினிமாவின் பெரும்பாலான பிரபலங்களை நடனம் ஆட வைத்தவர். அத்துடன் ‘விஸ்வநாதன் வேலை வேணும்’, ‘பாக்யதேவதா’ (பெங்காலி) உட்பட 10 படங்களை இயக்கியிருப்பதோடு, ‘தசாவதாரம்’, ‘படிக்காத மேதை’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சினிமாவுக்கென்றே தனது வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டு கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுக் காலமாக சினிமாவின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ரகுராம் மாஸ்டர் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 64. இவரது மனைவி கிரிஜாவும் நடன இயக்குனர் ஆவார். இவர்களுக்கு சுஜா, காயத்ரி ரகுராம் ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களும் சினிமாவில் பணியாற்றி வருபவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
ரகுராம் மாஸ்டரை இழந்து வாடும் அவரது குடும்பத்திறகு ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;