4 வேடங்களில் தனுஷ்!

4 வேடங்களில் தனுஷ்!

செய்திகள் 30-Nov-2013 3:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மாற்றான்’ படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் ’அனேகன்’. முதன் முதலாக தனுஷ், கார்த்திக் முதலானோருடன் கே.வி.ஆனந்த் கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் இந்தப் படத்தில் தனுஷ் நான்கு விதமான கேரக்டர்களில் நடிக்கிறார். ‘ஏஜிஎஸ்’ நிறுவன தயாரிப்பு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ‘ஆரம்பம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு என பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மும்பை அழகி அமிரா தஸ்தர் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் தனுஷ் குறித்து கே.வி.ஆனந்த் குறிப்பிடும்போது, ‘‘இதில் தனுஷுக்கு சேலஞ்சிங்கான ரோல்! மாறுபட்ட நான்கு கெட்-அப்களில் அவர் தோன்றுவார். தனுஷின் கேரியரில் இது பேசப்படும் ஒரு படமாக அமையும்’’ என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியாகிய ‘மரியான்’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘அனேகன்’ மீது ரொம்பவும் நம்பிக்கை வைத்து கடினமாக உழைத்து வருகிறார் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;