ரஜினி வெளியே, வடிவேலு உள்ளே?

ரஜினி வெளியே, வடிவேலு உள்ளே?

செய்திகள் 30-Nov-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்கள் ரிலீசாவது உறுதியாகி விட்டது. இந்தப் படங்களுடன் ரஜினியின் ‘கோச்சடையான்’ படமும் ரிலீசாகிறது என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் பொங்கலுக்கு ‘கோச்சடையான்’ ரிலீஸ் இல்லையாம்! பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிற இந்தப் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது திரைப்படத்துறையை பொறுத்த வரையில் ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதாலும், இன்னும் ‘கோச்சடையான்’ சம்பந்தமான சில வேலைகள் முடிக்க வேண்டி இருப்பதாலும் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பொங்கலுக்கு ‘கோச்சடையான்’ வராது என்று பேசப்பட்டு வரும் நிலையில் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகி நடித்து வரும் ’ஜெகஜால புஜபல தெனாலி ராமன்’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதன் வேலைகளை வேகப்படுத்தியுள்ளர்களாம். இந்தப் படத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, யுவராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையைல் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் எல்லா படப்பிடிப்பையும் முடித்து விட்டு, டிசம்பர் இறுதிக்குள் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடித்து பொங்கல் ரேசில் தெனாலி ராமனை களத்தில் இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளியாகும் படம் என்பதாலும், தனது அடுத்த இன்னிங்ஸ் அமர்க்களமாக அமைய வேண்டும் என்பதாலும் இந்தப் படத்தை புத்தாண்டு துவக்கத்தில் கொண்டு வருவதில் வடிவேலுவும் அதிக அக்கரை செலுத்தி வருகிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;