நியூசிலாந்தில் சேர்ந்து போலாமா?

நியூசிலாந்தில் சேர்ந்து போலாமா?

செய்திகள் 30-Nov-2013 10:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எந்தவிதமான சத்தமும், பரபரப்பும் இல்லாமல் உருவாகி வரும் படம் ‘சேர்ந்து போலாமா?’. மலையாளத்தில் பல படங்களை இயக்கிய அனில் இயக்கும் முதல் தமிழ் படம் இது. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நியூசிலாந்தில் நடக்கிறது. இந்தப் படத்தில் வினய், மதுரிமா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் ‘தலைவாசல்’ விஜய், தம்பி ராமையா, நந்து முதலானோரும் நடிக்கிறார்கள்.

’த்ரில்லர் ரோட் மூவி’ ஆக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை ரவி மாத்யூ எழுதியிருக்க, சஞீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ‘ஐஸ்வர்யா எண்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் சார்பில் சசி நம்பீசன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏனோ வானிலை மாறுதே - டிரைலர்


;