சிரஞ்சீவியை இயக்கப் போகிறாரா ஷங்கர்?

சிரஞ்சீவியை இயக்கப் போகிறாரா ஷங்கர்?

செய்திகள் 29-Nov-2013 5:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி! இவர் நடித்த கடைசி படம், ’மகதீரா”. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார் சிரஞ்சீவி. இந்தப் படத்தை தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட சிரஞ்சீவியால் பிறகு படங்களில் நடிக்க முடியவில்லை. 2009-ல் வெளியான ‘மகதீரா’ சிரஞ்சீவி நடித்த 149-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி தனது 150-வது படத்தில் எப்போது நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலாய் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களை மகிழ்விக்கும் விதமாக சிரஞ்சீவி விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவரது மகன் ராம் சரண் தேஜா நிறைய கதைகளை கேட்டு வருவதோடு, ஷங்கர் உட்பட பல பெரிய இயக்குனர்களை தொடர்பு கொண்டு பேசியும் வருகிறார். அடுத்த ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதால் தேர்தலுக்கு முன் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் வேலைகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறது மெகா ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரம்! ஆக, சிரஞ்சீவி தனது 150-வது படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது! அவரை இயக்க இருக்கும் இயக்குனர் யார் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.காத்திருப்போமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;