20-ல் ‘ஜே.கே.என்னும் நண்பன்’ வருகிறார்!

20-ல்  ‘ஜே.கே.என்னும் நண்பன்’ வருகிறார்!

செய்திகள் 29-Nov-2013 3:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு இடைவெளிக்குப் பிறகு சேரன் தனது ‘ட்ரீம் தியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் இயக்கி, தயாரித்துள்ள படம், ‘ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’. ஷர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் முதலோனோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது சுறுசுறுப்பாக நடந்து வர, படத்தை வருகிற 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சேரன். இந்த தகவலை சேரனே தெரிவித்திருக்கிறார். ’பாரதிகண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராஃப்’ போன்ற மனதை தொடும் பல படங்களை தந்த இயக்குனர் சேரனின் ‘ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’யை பார்க்க இன்னும் சில தினங்கள் காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;