இறுதிகட்டத்தில் நிமிர்ந்து நில்!

இறுதிகட்டத்தில் நிமிர்ந்து நில்!

செய்திகள் 29-Nov-2013 2:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில், ‘ஜெயம்’ ரவி, அமலா பால ஜோடியாக நடிக்கும் ‘நிமிர்ந்து நில’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘வாசன் விஷுவல் வென்ஞசுர்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிர்காஷ் குமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து அடுத்து ‘ஜெயம்’ ரவி தனது அண்ணன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்தப் படத்தில் ரவியுடன் ஜோடி சேரவிருப்பவர் நயன்தாரா. ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடித்த எல்லா படங்களும் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஜெயம் ரவி நடிப்பில்‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தின் வேலைகளும் இப்போது சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;