கம்பீர குரலுடன் மீண்டும் உஷா உதுப்!

கம்பீர குரலுடன் மீண்டும் உஷா உதுப்!

செய்திகள் 29-Nov-2013 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘டமால் டுமீல்’. இந்தப் படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘எந்திரன்’ படத்தில் இயக்குனர் ஷங்கருடன் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ இயக்கும் இந்தப் படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். காமெடி, த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஸ்பெஷல் தீம் சாங் ஒன்று இடம் பெறுகிறது. இந்த தீம் சாங்கை யார் பாடியிருக்கிறார் தெரியுமா? ஒரு காலத்தில் பாப் பாடல்களை பாடுவதில் கொடிக்கட்டி பறந்த, ‘பத்மஸ்ரீ’ உஷா உதுப்! தனக்கே உரித்தான வசீகரக் குரலில் பாப் பாடல்களை பாடி அன்றைய காலத்து இளம் உள்ளங்களை துள்ள வைத்த உஷா உதுப் பல மொழிகளிலாக நிறைய திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கும் உஷா உதுப், தற்போது பல டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இவரது கம்பீரமான குரலில் ‘டமால் டுமீல்’ படத்தின் தீங் சாங்கை கேட்க காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சேதுபதி - ஹே மாமா பாடல் ப்ரோமோ


;