சந்தோஷ் சிவனுடன் கை கோர்க்கும் லேகா வாஷிங்டன்!

சந்தோஷ் சிவனுடன் கை கோர்க்கும் லேகா வாஷிங்டன்!

செய்திகள் 29-Nov-2013 10:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர் சந்தோஷ் சிவன். ஏற்கெனவே பல படங்களை இயக்கியுள்ள சந்தோஷ் சிவன் அடுத்து ஒரு தமிழ் படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் இப்போது சூர்யா நடிக்கும் படத்தில் கமிட் ஆகியிருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அந்தப் படத்தை இயக்க்ப் போகிறார். சந்தோஷ் இயக்கவிருக்கும் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் லேகா வாஷிங்டன்.

ஏற்கெனவே இது குறித்து சந்தோஷ் சிவனும், லேகா வாஷிங்டனும் சந்தித்து பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். இப்போது படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப் போயிருப்பதால் லேகா கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறாராம். இருந்தாலும் புகழ்பெற்ற சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கும் அந்த நல்ல நாளை நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் லேகா வாஷிங்டன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ


;