விஷாலுக்கு ரெண்டு ஜோடி!

விஷாலுக்கு ரெண்டு ஜோடி!

செய்திகள் 29-Nov-2013 10:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தீபாவளி ரேஸில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு விஷால் தற்போது திரு இயக்கத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘பாண்டிய நாடு’ படத்தில் நடித்த லக்ஷ்மி மேனனும், இன்னொரு ஜோடியாக ‘வாகை சூட வா’ புகழ் இனியாவையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், ஜெகன், சுந்தர் ராமு ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரிச்சர்டு எம்.நாதன், இசை ஜி.வி.பிரகாஷ். இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் இப்படத்தை 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;