மீண்டும் மக்கள் நாயகன்!

மீண்டும் மக்கள் நாயகன்!

செய்திகள் 28-Nov-2013 3:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமா வரலாற்றில் 1980 -90 களில் பாக்ஸ் ஆபிசீல் தனக்கென ஒரு ராஜாங்கம் நடத்தியவர் நடிகர் ராமராஜன். ரசிகர்களால் ’மக்கள் நாயகன்’ என்று அழைக்கப்படும் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் ’கும்பாபிஷேகம்’. இந்தப் படத்தை ‘ வேல் ஃபிலிம் மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக ஜெயன் தயாரிக்கிறார். இப்படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.எம்.புஷ்பராஜ். மாறுபட்ட கிராமத்து கதையம்சத்தை கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் வருகிற 9-ஆம் தேதி துவங்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;