குட்டி ஏ.ஆர்.முருகதாஸ்

குட்டி ஏ.ஆர்.முருகதாஸ்

செய்திகள் 28-Nov-2013 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

திருப்பதி பிரதர்ஸ், யு.டி.வி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் 'இவன் வேற மாதிரி'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் போஸ் பேசும்போது, ‘'யு.டி.வி., திருப்பதி பிரதர்ஸ் ஒரு லக்கி டீம். 'வேட்டை' எடுத்தோம். அது கமர்ஷியல் ஹிட்டாச்சு. 'வழக்கு எண்18/9' பல அவார்டுகளை வாங்கி கொடுத்தது. போன வருஷம் டிசம்பர் 14ம் தேதி 'கும்கி' ரிலீஸ் ஆச்சு. படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த வருஷம் டிசம்பர் 13-ஆம் தேதி 'இவன் வேர மாதிரி' ரிலீஸ் ஆகிறது. இதுவும் ஹிட்டாகும். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

இயக்குனர் சரவணன், 'இவன் வேற மாதிரி' ஸ்கிரிப்ட்டை 50% தான் சொன்னார். படம் பார்த்தேன் 50% ஸ்கிரிப்டை விட படம் 200% சூப்பரா வந்திருக்கு. இந்த மாதிரியான நேர்த்தியான ஒரு ஸ்கிரிப்டை சமீபத்தில நான் பார்க்கல. ஒரு குட்டி முருகதாஸ் மாதிரி அவர் படம் எடுத்திருக்கிறார்.

விக்ரம் பிரபு ‘திருப்பதி பிரதர்ஸ்’ அறிமுகபடுத்திய ஹீரோ. ‘கும்கி’யில் பார்த்த விக்ரம் பிரபு இந்த படத்தில வேற மதிரி இருக்கிறார். ஆக்‌ஷன், டான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் என பிரமாதமாக பண்ணியிருக்கிறார் . படம் ரிலீஸ் ஆன பிறகு டாப் 6 ஹீரோக்களோட இவரும் ஒரு ஹீரோவா இருப்பார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டிரைலர்


;