வேளச்சேரியில் சரத்குமார், இனியா!

வேளச்சேரியில் சரத்குமார், இனியா!

செய்திகள் 27-Nov-2013 2:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

போலீஸால் நடத்தப்படும் ‘என்கவுண்டர்’ என்பது மனித உரிமை மீறலா, இல்லையா? என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் ‘வேளச்சேரி’. இந்தியாவில் இதுவரை 586 போலி என்கவுண்டர் நடந்துள்ளது. இது தவிர ஆயிரக்கணக்கான அதிகார பூர்வமான என்கவுண்டர்களும் நடந்துள்ளது. ஒரு புறம் மனித உரிமை ஆர்வலர்கள் என்கவுண்டருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நாட்டில் நடக்கும் குற்றங்களில் இருந்து மக்களையும், நாட்டையும் காப்பாற்ற என்கவுண்டர் தேவை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த கருத்துக்கள் பின்னணியில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக சரத்குமார் நடிக்க, மனித உரிமை ஆர்வலராக இனியா நடிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருபவர் திருமலை வேந்தன். ‘சிவம் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ். மணி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தாஜ்னூர் இசை அமைக்கிறார். .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;