‘ஜில்லா’ லொகேஷனில் நிலநடுக்கம்! உஷாரான விஜய்!

 ‘ஜில்லா’ லொகேஷனில் நிலநடுக்கம்! உஷாரான விஜய்!

செய்திகள் 27-Nov-2013 12:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’இளைய தளபதி’ விஜய் தனது ’ஜில்லா’ படத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜப்பான் நாட்டிலும் நடைபெற்றிருக்கிறது. படத்தின் இயக்குனர் நேசன் ஜப்பானின் பழைய தலை நகரமான ‘க்யூடோ’வில் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படம் பிடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த இடம் பழைய காலத்து ஜப்பானை பிரதிபலிக்கும் விதமாக இருக்குமாம! விஜய், காஜல் அகர்வால், இயக்குனர் நேசன் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அங்கு படப்பிடிப்பை நடத்த சென்றுள்ளனர்.

ஆனால் இவர்கள் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு படப்பிடிப்பை நடத்த பல கெடுபிடிகள் ஏற்பட்டதாம்! படப்பிடிப்பு அனுமதிக்கு நிறைய பணமும் கட்ட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக இங்கு இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியை தொடர்புகொண்டு பேச முயற்சித்துள்ளனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த இடத்தில் தொலை தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் படப்பிடிப்பு குழுவினரால் தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதனால எந்த காரணத்தைக் கொண்டும் படப்பிடிப்பு தடைப்பட்டு விடக் கூடாது என்று களத்தில் இறங்கிய விஜய், உடனே ஜப்பான் அரசாங்கத்தில் கட்ட வேண்டிய பணத்தை திரட்டி கொடுத்ததோடு, ஜப்பான் அரசு அதிகாரிகளிடம் பேசி படப்பிடிப்புக்கான முறையான அனுமதிகளை பெற்று வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி வந்திருக்கிறார்கள். விஜய்யின் சமயோஜித செயல்களை பார்த்து அத்தனை பேரும் அதிசயித்து போனார்களாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;