‘தங்க மீன்கள்’ படத்திற்கு பாராட்டு!

 ‘தங்க மீன்கள்’ படத்திற்கு பாராட்டு!

செய்திகள் 27-Nov-2013 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ராம் இயக்கிய, ‘தங்க மீன்கள்’ படம் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் நேற்று திரையிடப்பட்டது. அங்குள்ள ஐனாக்ஸ் திரையரங்கில் இப்படம் திரையிடப்படுவதற்கு முன்னாடி படத்தின் இயக்குனர் ராம், தயாரிப்பாளர் சதீஷ்குமார், நடிகை பத்மப்ரியா, ஷெல்லி கிஷோர் முதலானோர் கௌரவிக்கப்பட்டனர்.

அப்போது இயக்குனர் ராம், ‘‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’’ என்று தமிழில் பேசினார். பிறகு தொடர்ந்து பேசியவர், ‘‘தங்கமீன்கள்’ படம் எனக்கு இங்கு மிழில் பேசும் ஒரு வாய்ப்பினை தந்திருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது’’ என்றும் கூறினார்.

பல நாடுகளை சேர்ந்த சினிமா பிரபலங்களுக்கு முன் திரையிடப்பட்ட ’தங்கமீன்கள்’ படத்திற்கு நிறைய பராட்டுக்கள் கிடைத்துள்ளது. இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ள ஒரே தமிழ் படம் ‘தங்கமீன்கள்’ தான்! இப் படத்தை மீண்டும் வருகிற 29 ஆம் தேதி திரையிடப்படவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;