மலையாளத்தில் கமல்!

மலையாளத்தில் கமல்!

செய்திகள் 27-Nov-2013 10:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் கமல்ஹாசன், ஆரம்ப காலத்தில் நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் தமிழில் பெரிய நடிகராக அந்தஸ்து பெற்றார். மலையாள சினிமா ரசிகர்களை பொறுத்தவரையில் கமல்ஹாசன் ஒரு மலையாள நடிகர்தான்! அதேபோல கமல்ஹாசனுக்கும் மலையாள சினிமா மீதும், மலையாள சினிமா ரசிகர்கள் மீதும் ஒரு தனி அன்பு, ப்ரியம் எப்போதும் உண்டு! கிட்டத்தட்ட 50 மலையாள படங்களில் நடித்துள்ள உலக நாயகன் தற்போது கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, தான் ஒரு மலையாள படத்தை த்யாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த புராஜெக்ட் உடனே கிடையாது என்றும் கூறியிருக்கிறர். கமல்ஹாசன் கடைசியாக நடித்த மலையாள படம் ’ஃபோர் ஃப்ரெண்ட்ஸ்’. இதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் கலைஞானி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;