சூப்பர்ஸ்டாருடன் மோதும் சோனு சூத்!

சூப்பர்ஸ்டாருடன் மோதும் சோனு சூத்!

செய்திகள் 26-Nov-2013 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘ராஜா’, ‘சந்திரமுகி’, ‘ஒஸ்தி’ போன்ற பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்தவர் சோனு சூத். இவர் ஏராளமான ஹிந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலாக பெரும்பாலான ஹீரோக்களுடன் வில்லனாக மோதிய சோனு சூத் அடுத்து மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடனும் மோத இருக்கிறார்.

பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கும் ‘லைலா ஓ லைலா’ என்ற படத்தில் மோகன்லால், அமலா பால் ஜோடியாக நடிக்க, கதையில் படு பயங்கர வில்லன் கேரக்டர் ஒன்று வருகிறதாம். இதற்கு பல வில்லன் நடிகர்களை பரிசீலித்த இயக்குனர் ஜோஷி கடைசியில் சோனு சூத் தேர்வு செய்துள்ளார். சோனு சூத் நடிக்கும் முதல் மலையாள் படம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்


;