எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்திலும் நடிப்பேன்! அனுஷ்கா அதிரடி!

எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்திலும் நடிப்பேன்! அனுஷ்கா அதிரடி!

செய்திகள் 26-Nov-2013 10:36 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை அனுஷ்கா கையில் நிறைய படங்களை வைத்துக் கொண்டு படு பிசியாக நடித்து வந்தாலும் ஒரு சில சமூக சேவைகளிலும் தன்னை அர்பணித்துக் கொண்டு செயலாற்றி வருகிறார்.

பிரபல மேஜிக் கலை நிபுணர் பி.சி.சர்க்காரின் பேத்தி டாக்டர் பியா சர்க்காரின் டீச் எய்ட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ட் ஃபோர்ட் பல்கலைக்கழகமும் சேர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்காக அந்த அமைப்பு, அந்தந்த நாட்டின் பிரபலங்களின் அனிமேஷன் உருவங்களை பயன்படுத்தி எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார படங்களை தயாரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த் நடிகைகள் அனுஷ்கா, சுருதி ஹாசன் ஆகியோரின் அனிமேஷன் உருவங்களை பயன்படுத்தி விழிப்புணர்வு சி.டி.தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அதில் அனுஷ்கா கலந்துகொண்டு பேசும்போது,

‘‘நான் பெங்களூருவில் படிக்கும்போது அந்த கல்லூரியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கும். நான் அதை கண்டுகொளவதில்லை. எய்ட்ஸ் ஒரு தொற்று நோய் என்று நினைத்து பயந்த காலம் உண்டு. டாக்டர் பியா சர்க்காரிம் அறிமுகம் கிடைத்தப் பிறகு எய்ட்ஸ் நோய் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். அதனால்தான் இந்த நிகழிச்சியில் கலந்துகொள்கிறேன்.

சினிமாவில் நடித்துக் கொண்டே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்குகிறேன். எய்ட்ஸ் நோய் இல்லாத ஒரு சமூகம் அமைய வேண்டும் என்றால் பள்ளி பருவத்தில் இருந்தே பாலியல் கல்வியை மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். பெற்றோர்களும் இது பற்றி குழந்தைகளிடம் விளக்க வேண்டும். சினிமா காட்சிகளால் தான் பாலியல் குற்றங்கள் அதிகமாகி எய்ட்ஸ் நோயாளிகள் பெருகுகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக எடுக்கப்படும் படங்களில் நான் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’’ என்றார் அனுஷ்கா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கௌதமிபுத்ர சாதகர்ணி - டிரைலர்


;