சிம்பு, நயன்தாரா படத்தை வாங்க போட்டி போடும் சேனல்கள்!

சிம்பு,  நயன்தாரா படத்தை வாங்க போட்டி போடும் சேனல்கள்!

செய்திகள் 25-Nov-2013 3:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன் தயாரித்து நடிக்கும் பெயரிடப்படாத படம் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகி முடிவு செய்யப்படாத நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. நயன்தாராவை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தால் என்ன என்று யோசித்த படக்குழுவினர் அதற்கான முயற்சியிலும் வெற்றி பெற்றனர். ‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் பிரிந்திருந்த இவர்கள் மீண்டும் சேர்ந்து நடிப்பது ஒட்டுமொத்த கோலிவுட்டையும், ரசிகர்களையும் வியப்படையச் செய்தது. இது படத்தின் வியாபாரத்திற்கு பெரிய அளவில் உதவியுள்ளது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற முன்னணி சேனல்கள் போட்டி போட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;