’கும்கி’யை முந்திய வியாபாரம்!

’கும்கி’யை முந்திய வியாபாரம்!

செய்திகள் 25-Nov-2013 1:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'திருப்பதி பிரதர்ஸ்' மற்றும் ‘யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இவன் வேற மாதிரி'. இப்படம் தொடங்கிய நாளிலிருந்தே பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் படமான இப்படத்தில் விக்ரம்பிரபு, சுரபி ஜோடியாக நடிக்க சரவணன் இயக்கியுள்ளார்.

தற்போது படத்தின் வியாபார பேரம் சூடு பிடித்துள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டி.வி. பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. அத்துடன் எல்லா விநியோக ஏரியாக்களும் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளன. விக்ரம் பிரபு அறிமுகமாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘கும்கி’யை விட அதிக விலை கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு உரிமை அதிக விலைக்கு விற்றுள்ளதாம்! இப்படம் டிசம்பர் 13ம் தேதி உலகமெங்கும் வெளிவருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;