பாலுமகேந்திரா அசிஸ்டென்டுன்னு சொல்லிக்க முடியாது!

பாலுமகேந்திரா அசிஸ்டென்டுன்னு சொல்லிக்க முடியாது!

செய்திகள் 25-Nov-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையமைபாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘மதயானக் கூட்டம்'. இதில் அறிமுக கதாநாயகனாக கதிர் உடன் கதாநாயகியாக ஓவியா நடித்திருக்கிறார். குற்றப் பரம்பரை உள்ளிட்ட பல நாவல்கள் எழுதிய வேல.ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் பாலுமகேந்திராவின் உதவியாளர் விக்ரம் சுகுமார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது படத்தை பற்றி இயக்குனர் விக்ரம் சுகுமார் கூறும் போது, ‘'ஜி.வி. சாரோட முதல் தயாரிப்பு. என்னை நம்பி இந்தப் படத்தை கொடுத்த ஜி.வி சாருக்கு முதல் நன்றி.பாலுமாகேந்திரா சார் ஸ்கூல்ல இருந்து வந்ததுனால ஒரு பெரிய பொறுப்பு இருந்தது. சரியான படம் கொடுக்கலைன்னா பாலுமகேந்திராவோட அசிஸ்டென்டுன்னு சொல்லிக்க முடியாது. ‘ ஆடுகளம்’ படத்துக்கு வசனம் எழுதினது மூலமா கிடைத்த அந்த பெயரையும் காப்பாத்தணும். அதனால ரொம்ப யோசிச்சு யதார்த்தம் மீறாத ஒரு கதையா தேனி மாவட்டத்தில நடக்கிற மனிதர்களின் வாழ்வியலை மையமா வச்சு உருவாகியுள்ளோம். இன்றைக்கும் அங்கே நடக்கும் விஷயங்களை அப்படியே படம்பிடித்துள்ளோம்.

கதை சொல்லும்போது கதையில் உள்ள உணர்வுகளை மிகச்சரியாக புரிந்துகொண்டு 'பிரதர் இது வேற ஒரு லெவல்ல வரும் பிரதர், நம்ம இந்த கதையை அப்படியே எடுத்துடுவோம்'. என்றார் ஜி.வி.சார். அது எனக்கு உற்சாக டானிக்கா அமைஞ்சது. ஜி.வி சார் இல்லைன்னா இந்தப் படம் இல்லை. இது ஒரு புதிய முயற்சி.

இந்தப் படத்தில அரிவாள், கத்தி இருந்தாலும் யதார்த்தத்தை மீறாத வகையில் இருக்கும். அன்பை வெளிப்படுத்தும்போதே அந்த மக்கள் அதட்டலுடன் தான் வெளிப்படுத்துவார்கள். குறிப்பா அவர்கள் சாப்பிட்டு போங்க என்பதை கூட சத்தமாக தான் சொல்வார்கள் படத்தில் வன்முறை இருக்காது, குறிப்பிட்ட சமூகத்தையும் மையப்படுத்தவில்லை. கேரளாவில் இருந்து தேனிக்கு வந்து நர்ஸிங் படிக்கும் பெண்ணாக ஓவியா நடித்துள்ளார்" என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;