ஆறு மொழிகளில் உருவாகும் படம்!

ஆறு மொழிகளில் உருவாகும் படம்!

செய்திகள் 25-Nov-2013 12:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரன்வீர் சிங் காக்வால் வழங்க, 'வாரியர்ஸ் கிளான் பிக்சர்ஸ்' தயாரிக்கும் படம் 'என் உயிர் என் கையில்'. இப்படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா, மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 'வி ஹவுஸ் புரொடக்‌ஷன்'ஸ்’ சுரேஷ் காமாட்சி படத்தின் டிரைலரை வெளியிட, இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் பெற்றுக்கொண்டார். 'என் உயிர் என் கையில்' படத்தின் இயக்குனர் ராகுல் சிங் காக்வால் பேசும்போது,

“ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் எடுத்திருக்கிறோம். படத்தின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் தமிழகத்தைச் சேர்ந்த டெல்லியில் பணிபுரியும் ஒரு ஆடிட்டராக வருகிறார். ஒரு சந்தர்பத்தில் அவர் கண் முழித்துப் பார்க்கும்போது மூன்றுக்கு மூன்று அடி கொண்ட பெட்டியில் அவரை அடைத்து வைத்திருக்கிறார்கள். எதற்காக யாரால் இப்படி அவரை அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறோம். படம் முழுவதும் ஒரே நடிகர் தான். மேலும் மிகவும் குறைந்த இடத்தில் படம் பிடிக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்கிற சாதனையையும் இந்தப் படம் நிகழ்த்தியிருக்கிறது” என்றார். விழாவில் படத்தின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ், வசனகர்த்தா சித்தார்த், மிஸ் இந்தியா போட்டியாளர் ஆலிஷா, நடிகை இந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;