கன்னட படத்துக்கு எதிராக டி. இமான் அதிரடி!

கன்னட படத்துக்கு எதிராக டி. இமான் அதிரடி!

செய்திகள் 25-Nov-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எழில் இயக்கிய, ‘மனம் கொத்தி பறவை’ படம் கன்னடத்தில் ரீ-மேக் ஆகி இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. ‘மனம் கொத்தி பறவை’க்காக டி.இமான் இசை அமைத்திருந்த பாடல்களின் ட்யூன்களை அப்படியே கன்னட ரீ-மேக் படத்தில் பயன்படுத்தி, படத்தின் சிடி மற்றும் விளம்பரங்களில் டி.இமான் பெயரை இடம் பெற செய்திருக்கிறார்கள்.

ஆனால் இது சம்பந்தமாக இமானிடம், ‘மனம் கொத்தி பறவை’ படம் சம்பந்தப்பட்டவர்களோ, கன்னட ரீ-மேக் உரிமையை பெற்றவர்களோ முறையாக அனுமதி பெறவில்லையாம். அது குறித்து டி.இமான் கருத்து தெரிவிக்கையில், ‘‘ஒரு படத்தின் ரீ-மேக் உரிமையை வேறொரு மொழியில் ரீ-மேக் செய்வதற்கு வழங்கும் அதிகாரம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உண்டு.

ஆனால் படத்தின் மியூசிக் கம்போசர் என்ற முறையில் ரீ--மேக் செய்கிற படத்தில் அதே ட்யூன்களை பயன்படுத்தி, அதே இசை அமைப்பாளரின் பெயரை பயன்படுத்தும்போது அது சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளரிடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்! அப்படி என்னிடம் அனுமதி பெறாமல் என் பெயருடன் வெளியாகிற இந்த கன்னட படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று அதிரடியாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;