உலகை காக்கும் முயற்சியில் கணேஷ் – குமரேஷ்!

உலகை காக்கும் முயற்சியில் கணேஷ் – குமரேஷ்!

செய்திகள் 25-Nov-2013 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், உட்பட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருப்பவர்கள் கணேஷ்-குமரேஷ். இந்த இருவரும் Dance Like a Man என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருதுகளை பெற்றுள்ளனர். மேலும் கே.பாலசந்தரின் ‘ஒரு வீடு இரு வாசல்’ என்ற படத்தில் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

உலகம் இயற்கையால் வசந்தகாலம், மழைகாலம், வெயில்காலம், பனிக்காலம் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது .

ஆனால் தற்போது உலகம் வெப்பமாகிக் கொண்டிருப்பதால் அந்தந்த காலங்களில் நிகழ வேண்டிய இயற்கை சூழ்நிலைகள் சரியாக நிகழ்வதில்லை. இதை கருத்தில் கொண்டு உலகத்தை காக்க முயற்சி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி ‘ஹோம் ரெகார்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் 'சீசன்ஸ்' இசை ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் கணேஷ் – குமரேஷ் இருவரும். இந்த இசை ஆல்பத்தில் கணேஷ் – குமரேஷ் – சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;