ஆடியோ விழாவில் பரபரப்பு!

ஆடியோ விழாவில் பரபரப்பு!

செய்திகள் 23-Nov-2013 5:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

“பண்ணையாரும் பத்மினியும்” குறும்படமாக வெளிவந்து பாராட்டுக்கள் பெற்ற படம். இக்குறும்படத்தை அதே பெயரிலேயே இயக்கியுள்ளார் எஸ்.யு. அருண்குமார். இப்படத்தை எம்.ஆர்.கணேஷ் தயாரித்துள்ளார்.

மறைந்த கவிஞர் வாலி இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.அறிமுக இசையமைபாளர் ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.உதயகுமார், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, ராம், விக்னேஷ் சிவன் இவர்களுடன் தெலுங்குத் திரைப்பட ஹீரோ நானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர்.

விழாவில் பேசிய ஆர்.வி.உதயகுமார், “பாடல் காட்சி ஒன்றை எடுப்பதற்காக இப்படத்தின் இயக்குனர் அருண்குமார் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டார். இந்த காலத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஒரு இயக்குனர் இன்னொரு இயக்குனரிடம் ஆலோசனை கேட்பதே பெரிய விஷயம். திறமையான இயக்குனர்.

விஜய் சேதுபதியை நான் ரொம்ப காலமாக பார்க்கிறேன். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகும்போது கூட அவரின் குணம் மாறாம அப்படியே இருக்கார். அவரை பார்த்துக்கொண்டு ‘மவனே… நீ மட்டும் மாறுனா இங்கே காணாமல் போயிருவ” ஜாக்கிரதை! என அன்புடன் கண்டித்தவர் தொடர்ந்து, இரண்டு படம் ஓடிருச்சுன்னா ஏதோ சினிமாவை கண்டுபிடிச்சதே நான்தான்ங்கிற மாதிரி சில பேர் பேசுறாங்க.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் காத்தடிச்சா பறந்துடுவார். ஆனா அவர் இசை அருமை. அடுத்த இளையராஜா சந்தேகமில்லாமல் இவர்தான். அந்தளவுக்கு அபாரமாக இசையமைத்திருக்கிறார்" என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பேசும்போது, “மிக முக்கியமாக நான் நன்றி கூற விரும்புவது வாலி சாருக்குத்தான். அடுத்த படத்துக்கும் அவர்தான் பாடல் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனா அதற்கு வாய்ப்பிலாமல் போய்விட்டது” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;