அனுஷ்காவின் அதிரடி ஸ்டேட்மென்ட்!

அனுஷ்காவின் அதிரடி ஸ்டேட்மென்ட்!

செய்திகள் 23-Nov-2013 1:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவனின், ‘இரண்டாம் உலகம்’ பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இதில் கதாநயாகியாக நடித்திருக்கும் அனுஷ்கா ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசும்போது, ”என்னை பொறுத்தவரையில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது கதையின் அவுட்லைனை கேட்கிறேன். என்னோட கேர்கடர் பற்றி தெரிந்து கொள்கிறேன். அத்துடன் அந்த கதையை இயக்குகிற இயக்குனர் பற்றியும் தெரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொள்கிறேன். அதற்கப்புறம் இந்தப் படம் ஓடுமா? ஓடாதா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவதில்லை.

எல்லாரும் படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் தான் எடுக்கிறாங்க. ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டால் என்னோட கேர்கடரை சிறப்பாக செய்வதிலேயே என் கவனம் இருக்கும். இப்போது என் ‘மைன்ட்’டில் எஸ்.எஸ்.ராஜமௌலி சார் உருவாக்கியிருக்கிற ‘பாஹுபாலி’ படத்தோட கேரக்டரும், குணசேகர் சார் இயக்கும், ‘ருத்ரம்மா தேவி’யோட பாத்திரம் மட்டும் தான் இருக்கு’’ என்று அதிரடியாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ‘இரண்டாம் உலகம்’, ‘பாஹுபாலி’ ’ருத்ரம்மா தேவி’ என அனுஷ்கா இப்போது நடித்து வரும் படங்கள் எல்லாம் மெகா பட்ஜெட் படங்கள் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;