ராஜேஷின் அடுத்த ஹீரோ?

ராஜேஷின் அடுத்த ஹீரோ?

செய்திகள் 23-Nov-2013 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’அழகுராஜா’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாகி விட்டார் இயக்குனர் எம். ராஜேஷ். ஜீவாவை வைத்து, ‘சிவா மனசுல சக்தி’, ஆர்யா ஹீரோவாக நடித்த, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களை இயக்கிய ராஜேஷ் தற்போது இவர்கள் இருவருக்கும் தனித் தனியாக ஸ்கிரிப்ட்டை தயார் செய்து வருகிறார்.

இதில் முதல் படமாக ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ராஜேஷ். இந்தப் படம் முடிந்ததும் அடுத்த படமாக ஜீவா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கெனவே ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, ஜீவா நடித்த படங்கள் வெற்றிப் பெற்ற சென்டிமெண்ட் மீண்டும் இவர்களை கூட்டணி அமைக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் சந்தானமும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VSOP - லக்கா மாட்டிகிச்சி சாங் டீசர்


;