‘ஜில்லா’ மோகன்லால் வழியில் அஜித்!

 ‘ஜில்லா’ மோகன்லால் வழியில் அஜித்!

செய்திகள் 23-Nov-2013 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தல’ அஜித், தன் இமேஜை பற்றி கவலைப்படாமல் இப்போது நரைத்த தலைமுடியுடன் வந்து கலக்குகிறார் அல்லவா? சென்டிமென்டாக அஜித், ‘நரை’யுடன் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியிருப்பதால் ‘தல’ இனி இதே கெட்-அப்பில் தொடருவார் என்று எதிர்பார்க்கலாம்! இது போன்ற ஒரு சென்டிமென்ட் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கும் உண்டு! அதாவது மோகன் லால் வேட்டியை கட்டிக்கொண்டு, மீசை பிரித்தவாறு நடித்த பெரும்பாலான மலையாள படங்களும் சூப்பர் ஹிட்! இப்போது அதுமாதிரியான ஒரு கெட்-அப்பில் ‘ஜில்லா’வில் நடித்திருப்பதால் ‘ஜில்லா’ படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் ஆரூடம் கூறுகிறார்கள்!

ரசிகர்கள் நினைக்கிற மாதிரி மோகன்லால் வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு மீசை பிரித்து நடிக்கும் ‘ஜில்லா’ படம் சூப்பர் ஹிட்டானால் மோகன்லாலின் இந்த சென்டிமென்ட் தமிழிலும் தொடரலாம்! ஆக, வருகிற பொங்கலன்று நரைத்த ’தல’யின் ‘வீர’மும், மீசை பிரிக்கும் மோகன்லாலின் ‘ஜில்லா’வும் நேருக்கு நேர் மோதவிருப்பது ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அய்யா உருவான விதம் - சீதக்காதி


;