நஸ்ரியாவின் இன்னொரு அவதாரம்!

நஸ்ரியாவின் இன்னொரு அவதாரம்!

செய்திகள் 23-Nov-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மாறி பிறகு ஹீரோயினாக புரமோஷன் பெற்றவர் நஸ்ரியா. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலாக தற்போது நிறைய படங்களை கையில் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வரும் நஸ்ரியா இப்போது பின்னணிப் பாடகியாகவும் புரமோஷன் பெற்றுள்ளார்.

துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடிக்கு மலையாள படமான ‘சலால மொபைல்ஸ்’ படத்திற்காக தான் நஸ்ரியா பாடலை பாடியிருக்கிறார். இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்க, சரத் ஏ.ஹரிதாஸன் இயக்கி வருகிறார். நஸ்ரியா ஏற்கெனவே ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் பாடி தன்னை ஒரு சிறந்த பாடகியாகவும் நிரூபித்தவர் என்றாலும், திரைப்படத்திற்காக பாடுவது இது தான் முதல் முறை! தமிழில் எப்பப் பாட போறீங்க நஸ்ரியா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;