இரண்டாம் உலகம்

அமெச்சூர் அவதார்!

விமர்சனம் 22-Nov-2013 4:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு கொண்டுபோகும் முயற்சி என்ற தோரணையோடு வெளிவந்திருக்கும் ‘இரண்டாம் உலகம்’, உண்மையில் அதற்கான தரத்துடன் வந்திருக்கிறதா?

இப்படத்திலும் செல்வராகவன் காதலை தன் பாணியில் புதுவிதமாக சொல்ல முனைந்திருக்கிறார். ஊருவிட்டு ஊரு போயி, நாடு விட்டு நாடு போயி... இப்போ கிரகம் விட்டு கிரகம் தாவி தன் காதல் கதையைச் சொல்லியிருக்கிறார்.

(இது பூமியில நடக்குது) மது பாலகிருஷ்ணன் (ஆர்யா) ரொம்பவே நல்ல பையன். அவன் செய்யும் நல்ல செயல்களைப் பார்த்து அவன்மீது காதல் கொள்கிறாள் ரம்யா (அனுஷ்கா). தன் காதலை சொல்ல முயலும் ரம்யாவை உதாசீனப்படுத்துகிறான் மது. தன் மாற்றுத் திறனாளி அப்பாவிற்காகவே, அவன் அவளை உதாசீனப்படுத்துகிறான் என்பதை அதன் பிறகு தெரிந்து கொள்கிறாள் ரம்யா. ஆனால், அதற்குள் மதுவுக்கும் ‘அது’ வந்துவிடுகிறது.

(ஓவர் டு வேறு கிரகம்...) எங்கு பார்த்தாலும் சீரியல் பல்புகளை எரியவிட்டு அதன் வெளிச்சத்தை மட்டும் பீய்ச்சியடிப்பதைப் போல் காட்சியளிக்கும் ஒரு கிரகம் (‘ஒரு கிரகம்’தாம்ப்பா.... அதுக்கு ‘செல்வராகவன்’ பேரெல்லாம் வைக்கல...). அந்த கிரகத்தில் இருக்கும் கொஞ்சம் பேர்களில் வர்ணா (அதேமாதிரி அனுஷ்கா), மருவன் (அதே ஆர்யாதாம்ப்பா) இருக்கிறார்கள். பெண்களையே மதிக்காத அந்த கிரகத்திற்கு ஒரு பெண்ணே தெய்வமாக இருக்கிறார் (என்ன லாஜிக்கோ?). மற்ற பெண்களைப் போல் அடிமையாக இருக்கக்கூடாது என வீரமாக இருக்கும் வர்ணா எந்த ஆணையும் மதிக்காமல் திமிருடன் சுற்றுகிறாள். அதனால் தன்னைச் சுத்தித் சுத்தி வரும் மருவனையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாள்.

(கம்மிங் டு நம்ம பூமி...) ரம்யாவிற்கு வேறொருவனுடன் திருமணம் நிச்சயமானது தெரிந்ததும், தன் காதலை ரம்யாவிடம் வெளிப்படுத்துகிறான் மது. ஆரம்பத்தில் கொஞ்சம் பிகு செய்யும் ரம்யா, பிறகு ‘ஓகே’ப்பா... என மதுவுடன் ஒட்டிக் கொள்கிறாள்... பேசிக்கொண்டே ரம்யாவும், மதுவும் செல்லும்போது ‘கால் தடுக்கி விழுந்து’ இறந்துவிடுகிறாள் ரம்யா.

(மறுபடியும் அந்த கிரகம்) அப்படி இப்படி எதை எதையோ செய்து மன்னனின் ஒத்துழைப்புடன் வர்ணாவை திருமணம் செய்கிறான் மருவன். ஆனால், அவளோ அவனுடன் வாழப் பிடிக்காமல் பிடிவாதம் பிடிக்கிறாள். மன்னனின் வார்த்தைகளை மீறுவதால் அவளை காட்டுக்குள் ஓடவிடுகிறார்கள்.

(இப்போ இந்தப் பக்கம்...) என்ன செய்யுறதுன்னே தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கும் ஆர்யாவை, ஒரு நாய் வந்து கூட்டிக்கிட்டு போயி ரம்யா இறந்த இடத்துல நிக்க வைக்குது. அங்கே செத்துப்போன அவங்கப்பா நேர்ல வர்றாரு (அப்பா இறந்தது அந்தக் காட்சிக்குப் பிறகே ஆர்யாவிற்கு தெரிய வருகிறது). ‘மவனே... உன் காதல் உண்மைன்னா... இந்த பூமி நீ அவளை மறுபடியும் தேடிப் போறதுக்கு வழி கொடுக்கும்’னு சொல்லிட்டு... போயிடுறாரு. அப்புறம் ஆர்யா அப்படியே எங்கெங்கோ போறாரு.... ஒரு கார் தானா வந்து அவர கூட்டிட்டுப் போகுது... போகுது... போகுது... ஒரு மலை உச்சிக்குப்போகுது. அந்த நேரம் அந்த கிரகமும் பூமியும் ஒரு சில நிமிடங்கள் இணைந்து, இந்த ஆர்யாவை அந்த கிரகத்துக்குள்ள கொண்டு போயிடுது.

இதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதையும், ‘அவதார்’ போன்ற ஒரு முயற்சியை தமிழில் மேற்கொண்டுள்ளதற்காகவும் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்ப்பதே படைப்பாளிக்கு செய்யும் மரியாதை.

(‘இரண்டாம் உலக’த்தைக் காணச் செல்பவர்களுக்கு க்ளைமேக்ஸில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது...)

இப்படத்தைப் பற்றிய விமர்சனத்தை ‘விலாவரியாக’ எழுதுவதைவிட, சுருக்கமாக இரண்டு வரிகளில் எழுதிவிடலாம்.

செல்வராகவனிடம் இருந்து ரசிர்கள் எதிர்ப்பார்ப்பது ‘காதல்கொண்டேன்’களையும், ‘7ஜி’க்களையும் தானே தவிர, ‘அமெச்சூர் அவதார்’களை அல்ல...

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;